தஞ்சாவூர் அருகே மேலஉளூர் சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

 

தஞ்சாவூர், நவ. 17: ஒரத்தநாடு வட்டம் மேலஉளூர், ஆழியவாய்க்கால் கிராமச் சாலையில், மேலஉளூர் நடுத்தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சாலையின் இருபுறமும் உள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் குளம் பேல் தேங்கியது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லும் வெகுவாக சிரமப்பட்டனர்.
அதே போல், இந்த சாலை வழியாக தான் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எனவே, மழையினால் தேங்கிய தண்ணீரில் மாணவர்கள் நடந்து செல்லவதால், மழைக்காலங்களில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில் அவ்வப்போது மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருவதால், சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றும் வகையில் அங்கு நிரந்தரமாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் அருகே மேலஉளூர் சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: