×

கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி திருப்பட்டினம் புறவழி சாலையில் போராட்டம்

 

காரைக்கால், நவ.17: காரைக்காலில் சாலையில் திரியும் கேட்பாரற்ற மாடுகளால் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளில் அப்பாவி மக்களின் உயிர்களும் உடல்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அலட்சியமாக செயல்படும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி திருப்பட்டினம் புறவழிச் சாலையில் அப்பகுதி போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைக்கால்,திருப்பட்டினம் நிரவிநாகூர் பொதுமக்கள் கட்சிகளின் நிர்வாகிகள் இயக்கங்களின் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.மேலும் காரைக்கால் மக்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அன்சாரி நானா, இணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா,விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிரவி திருப்பட்டினம் தொகுதி செயலாளர் விடுதலை கனால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி திருப்பட்டினம் புறவழி சாலையில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupatnam Bypass Road ,Karaikal ,
× RELATED புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!