×
Saravana Stores

கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்

ஈரோடு, நவ. 17: தமிழ் மாதம் கார்த்திகை 1ம் தேதி பிறப்பையொட்டி ஈரோட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே துளசி மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள துவங்கினர். கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள் (1 மண்டலம்) காலை, மாலை வேளைகளில் குளித்து, பிரம்மசரியம் விரதம் மேற்கொண்டு, ஐயப்பனை வழிபடுவர். தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்வது வழக்கம்.

இந்நிலையில், கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை நீராடி அவர்களுக்கு பிரியமான கோயில்களுக்கு சென்று அவர்களது குருசாமி முன்னிலையில் ஐயப்பனை வணங்கி துளசி மாலை அணிந்து தங்களது விரதங்களை தொடங்கினர். இதில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பா சேவா நிறுவனத்தின் ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை திரளான பக்தர்கள் கோயில் குருசாமி முன்னிலையில் சரண கோஷத்துடன் மாலை அணிந்து, ஐயப்பனை வழிபட்டு சென்றனர். இதேபோல், ஈரோடு பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள துவங்கினர்.

The post கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர் appeared first on Dinakaran.

Tags : Karthikai ,Ayyappa ,Erode ,Sabarimala Ayyappan ,Kerala ,
× RELATED கும்பகோணத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்