×
Saravana Stores

கிலோ ரூ.20க்கு விற்பனை கோபி நகராட்சியில் இடப்பற்றாக்குறை பிரச்னை தீர்க்கப்படுமா?

கோபி, நவ.15: ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சியாக கோபி நகராட்சி விளங்கி வருகிறது. 1949ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்ட பிறகு கோபி, சத்தி சாலையில் கச்சேரிமேடு பகுதியில் தற்போது உள்ள நகராட்சி அலுவலகம் கட்டுமான பணி 1952ம் ஆண்டு தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமான பணிகள் முடிந்ததும் 1954ம் ஆண்டு அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, வார்டு விரிவாக்கம் நடைபெற்ற பிறகு கடந்த 2108ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கோபி நகராட்சியில் 18 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. 3 ஆயிரம் வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில் நகராட்சியில், பொது பிரிவு, பொது சுகாதார பிரிவு, நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, வருவாய் பிரிவு, நகராட்சி நிர்வாக பிரிவு, நோய் தடுப்பு பிரிவு என பல்வேறு நிர்வாக பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு மட்டும் 130 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.

பொறியியல் பிரிவில் சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வழங்குதல், இயக்குதலும், பராமரித்தல் பிரிவுகளும், பொது சுகாதார பிரிவில் தூய்மை பணி, குப்பை அகற்றுதல், நுண் உரம் தயாரிப்பு, நாய் இனப்பெருக்கம் கட்டுப்படுத்துதல், பொது சுகாதார மருத்துவ பிரிவில் நோய் தடுப்பு பிரிவும், நகரமைப்பு பிரிவில் வீடு, வணிக நிறுவனம் கட்டுவதற்கான உரிமம் வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நகர்ப்புற உட்கட்டமைப்பு அனுமதி வழங்குதல் பிரிவும், வருவாய் பிரிவில் சொத்து பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு, வரி வசூல், சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி, குடிநீர் வரி, குப்பை வரி வசூல் செய்தல், விண்ணப்பம் வழங்குதல், நகராட்சி கடை, தினசரி மார்க்கெட் வாடகை வசூல், பேருந்து நிலைய வாடகை வசூல் பிரிவு, பொது சுகாதார பிரிவில் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் என 30க்கும் மேற்பட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது. இந்த பிரிவுகளில் 130 அலுவலர்கள் தவிர 200க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நகரில் உள்ள 30 வார்டுகளிலும் நகராட்சி சார்பில் 14 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் வரி செலுத்துதல், புதிய கட்டிட அனுமதி பெறுதல், ஆதார் திருத்தம் செய்ய என ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் வந்து செல்கின்றனர். இதனால், கோபி நகராட்சி அலுவலகம் காலை முதல் மாலை வரை கடும் இட நெருக்கடியிலேயே உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக அலுவலகத்தில் கோப்புகள் வைப்பதற்கு கூட இடமில்லாத நிலையில் பழைய பீரோக்கள் மீது வைத்தும், இருக்கும் அறையை சிறிய அறையாக தடுத்தும் குறுகிய இடத்திலேயே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் நகராட்சியை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோபி நகராட்சியில் ஆண்டு வருமானம் சுமார் ரூ.25 கோடியை எட்டி உள்ள நிலையில், கோபி நகராட்சியுடன் கலிங்கியம், மொடச்சூர், பா.வெள்ளாளலாளையம் மற்றும் லக்கம்பட்டி பேரூராட்சியை இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 வார்டுகளுடன் 7.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நகராட்சியில் தற்போது உள்ள நிர்வாக அலுவலக பணிகளை செய்யவே போதிய இடமில்லாத நிலையில் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் போது, கடும் இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

மேலும், ஈரோடு சத்தி சாலையில் நான்கு வழிச்சாலை அருகிலேயே அலுவலகம் அமைந்து இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தவும் முடியாத நிலையில் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கோபி நகராட்சி கட்டுப்பாட்டில் மொடச்சூர் வாரச்சந்தை உள்ளது. அங்கு பெருமளவு இடம் உள்ள நிலையில் நகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் முன்பு அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நகர்மன்ற கூட்ட அரங்கு, ஆணையாளர் மற்றும் சேர்மேன் அறை, மேனேஜர் அறை, பொறியாளர் அறை, பொது சுகாதார பிரிவு என அனைத்து பிரிவுக்கும் நீண்ட கால தொலை நோக்கு பார்வையுடன் புதிய அலுவலகம் கட்ட வேண்டும். கோபி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அங்கேயே செயல்படும் வகையில் புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது உள்ள அலுவலகத்தை பிரிவு அலுவலகமாக மாற்றவும், நகரின் வடக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு வரி செலுத்துதல் உள்ளிட்ட வசதிகளுடனும் புதிய அலுவலகத்தில் தே்றபு பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் கூறுகையில்,“நகராட்சி விரிவாக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அவ்வாறு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் பொதுமக்கள் வசதிக்காக புதிய அலுவலகம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post கிலோ ரூ.20க்கு விற்பனை கோபி நகராட்சியில் இடப்பற்றாக்குறை பிரச்னை தீர்க்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Gobi Municipality ,Gobi ,Erode district ,Kacherimedu ,Satthi road ,Dinakaran ,
× RELATED கோபி அருகே இலவச பட்டா நிலத்தை...