×

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

செங்கோட்டை,நவ.17: செங்கோட்டை அருகே வல்லத்தில் அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் ராஜலெட்சுமி, நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவ ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, பேரூர் செயலாளர்கள் கார்த்திக் ரவி, அலியார் முன்னிலை வகித்தனர், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார், கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ஜெயகுமார், வேல்முருகன், துரைப்பண்டியன் மகாராஜன், நகர செயலாளர்கள் கணேசன், முருகன், பேரூர் செயலாளர்கள் சுசீகரன், கணேஷ் தாமோதரன், பொதுக்குழு உறுப்பினர் முருகையா, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வாவை ஜாஹீர் உசேன், கோபிநாத், ஜாகீர் உசேன், பேச்சாளர் தீக்கனல் லெட்சுமணன், டேனி அருள்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

The post அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sengottai ,Vallam ,Tenkasi North District ,Krishnamurali ,MLA ,Makalirani ,Deputy Secretary ,Rajaletshumi ,Nellie Zone Information Technology Division ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக மதுரை வழியாக...