இந்நிலையில் போதைப்பொருட்கள் கடத்தப்படும் படகு கடற்படையால் அடையாளம் காணப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அதில் இருந்த சுமார் 700கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ.2500 முதல் ரூ.3500 கோடியாகும். இது தொடர்பாக படகில் இருந்த ஈரான் நாட்டை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* டெல்லியில் ரூ.900 கோடி கோகையின் பறிமுதல்
டெல்லியில் உள்ள ஒரு கூரியர் மையத்தில் சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள 80 கிலோவுக்கும் அதிகமான கோகையின் போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) நேற்று பறிமுதல் செய்தது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
The post குஜராத் கடல் பகுதியில் ரூ.2500 கோடி மதிப்புள்ள 700கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஈரானை சேர்ந்த 8 பேர் கைது appeared first on Dinakaran.