×
Saravana Stores

ஊர்க்காவல் படை வீரர்கள் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை உயர்வு

சென்னை: ஊர்க்காவல் படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படை வீரர்கள் மரணம் அடைந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.15,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காயம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக்கொடை நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

The post ஊர்க்காவல் படை வீரர்கள் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Home Guard ,CHENNAI ,Home Guards ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சென்னை ஊர்க்காவல் படையில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்