×

குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, நவ. 13: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். இதில், வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் செயல்பட ஆணை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தோழமை சங்க நிர்வாகிகளான மணிபாரதி, கண்ணன், பழனிசாமி, சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu Satthunavu ,Anganwadi Pensioners Association ,Erode Collector ,Sampath Kumar ,District Secretary ,Rajan ,Dinakaran ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு