மாணவர்கள் வாயில் டேப் ஹெச்.எம், 2 பேர் இடமாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோடேப் ஒட்டி 2 மணி நேரம் வகுப்பறையில் உட்கார வைத்து இருந்ததாக போட்டோ சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரின் வாட்ஸ் அப்புக்கு வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், புகைப்படத்துடன் கடந்த 11ம்தேதி நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜமை சந்தித்து மனு அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன், சம்பந்தப்பட்ட பள்ளியில் நடத்திய விசாரணையில், வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்து கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது, மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும், அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு பரப்பியதாகவும், இதற்கும், தலைமை ஆசிரியைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியைகள் பெல்சி சுமாகுலேட் பெர்சி, முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

The post மாணவர்கள் வாயில் டேப் ஹெச்.எம், 2 பேர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: