இதையடுத்து பொன்னுசாமி, பாசில் உள்ளிட்ட 7 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதையடுத்து மரண தண்டனையை எதிா்த்து 7 பேரும், ஆயுள் தண்டனையை எதிா்த்து இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது; டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை சென்னை ஐகோர்ட் எவ்வாறு விடுவித்தது? என கேள்வி எழுப்பியுள்ளது. பட்டப்பகலில் நடந்த பயங்கரமான கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையுமே உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. ஆதாரம் இருந்ததால் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை தந்தது. குற்றவாளிக்கள் 9 பேரும் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறது.
The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. குற்றவாளிகள் 9 பேரை விடுவித்தது எப்படி?: ஐகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!! appeared first on Dinakaran.