கொடைக்கானலுக்கு சுற்றுலா கேரள மாணவ, மாணவிகள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி அருகே வத்தலக்குண்டு சாலையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கேரள மாநிலம், திருச்சூர் – குருவாயூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் இங்கு உணவு அருந்தி விட்டு தங்கியுள்ளனர். நள்ளிரவில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நேற்று காலை மீண்டும் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து கொடைக்கானல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லாரன்ஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து அடங்கிய குழுவினர், விடுதிக்கு சென்று சோதனை செய்து உணவு அறையை தற்காலிகமாக மூடினர். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் கெட்டுப்போன உணவு என அறிக்கை வந்தால் விடுதி மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உணவு அறையும் நிரந்தரமாக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலுக்கு சுற்றுலா கேரள மாணவ, மாணவிகள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: