×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை துவங்கியதால் நாகூர், வேளாங்கண்ணி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை கலெக்டர் ஆய்வு

நாகப்பட்டினம், நவ.11: நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர், வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட செபஸ்தியார்கோவில் மற்றும் பூக்காரத்தெரு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட செபஸ்தியார்கோவில் மற்றும் பூக்காரத்தெரு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் முடிக்க வேண்டும். தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் வடிகால்கள் மற்றும் பாதாள சாக்கடைகளை தூர்வாரும் பணிகளை தரமாக செய்ய வேண்டும். வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட செபஸ்தியார்கோவில் பகுதியில் எதிர்காலங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால்களை சீர் செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

பூக்காரத்தெரு பகுதியில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 37 லட்சம் மதிப்பில் 3.8 கி.மீ தூரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி, சுனாமி குடியிருப்பு பகுதியில் தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு மழைநீரை சேமித்து நீர்உறிஞ்சு மூலம் வெளியேற்றம் செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆர்டிஓ அரங்கநாதன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனாசைமன், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல்அலுவலர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வடகிழக்கு பருவமழை துவங்கியதால் நாகூர், வேளாங்கண்ணி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagor ,Velankanni ,North East Monsoon ,Nagapattinam ,Akash ,Municipality ,Sebastiarkovil ,Pookkaratheru ,Velankanni Municipality ,Sebastiarkovi ,Dinakaran ,
× RELATED நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி...