×
Saravana Stores

மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தேங்காய் பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு

வரமிளகாய் – 6
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 3
துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
சோம்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மல்லி, பச்சரிசி, மிளகு, சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மற்றொரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பிரியாணி இலை, சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வாக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.பின்னர் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அடுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின்பு அதில் 2 கப் நீரை ஊற்றி, தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு, 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.பின் தீயைக் குறைத்து, 5 நிமிடம் சிக்கனை எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மூடி வைத்து 1 மணிநேரம் கழித்து பரிமாற வேண்டும்.

The post மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Muniandi ,Madurai ,Dinakaran ,
× RELATED சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற...