×
Saravana Stores

பாசிப்பயறு கிரேவி

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு/ பச்சை பயறு – 1 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 3/4 டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
பூண்டு – 5 பல்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பயறை சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.பின் கழுவி வைத்துள்ள பாசிப்பயறை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி, பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து 2 நிமிடம் கிளறி வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பயறு கிரேவி தயார்.

 

The post பாசிப்பயறு கிரேவி appeared first on Dinakaran.

Tags : Pasippayaru Graevi ,Dinakaran ,
× RELATED ஒரு துளி தாய்ப்பால் தங்கத்தை விட விலை மதிப்பானது!