- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சீர்காழி
- கொள்ளிடம்
- புதுச்சேரி
- லால்பெட்டாய்
- கடலூர்
- திருவள்ளூர்
- Marakanam
- பெரம்பலூர்
- நாகப்பட்டினம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, சீர்காழி, கொள்ளிடம், புதுச்சேரி, லால்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மரக்காணம், பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 14 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கொள்ளிடத்தில் 13.4 செ.மீ, தரங்கம்பாடியில் 5.9 செ.மீ, செம்பனார்கோவிலில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளின் அப்பால் நிலை கொண்டுள்ளதால் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
அது தற்போது மேற்கு திசை நோக்கிநகர்ந்து வருவதால் தமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை கொட்டியது. நேற்று காலையிலும் மழை விட்டு விட்டு பெய்தது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 80மிமீ மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.