×

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ.13: விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய திருத்தச்சட்டம் என்ற பெயரில் ஆளும் ஒன்றிய பாஜ அரசு இஸ்லாமியர்களின் வழிபாடு மற்றும் தர்மத்திற்கு பயன்படும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட ஜேபிசியில் உறுப்பினர்கள் கருத்து சொல்ல முடியாத சூழலை உருவாக்கி அரசின் எண்ணத்தை மட்டும் பிரதிபலிக்ககூடியதாக மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவிட்டனர்.

The post தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bahia government ,Tamil ,Nadu ,Dawheet ,Jamaat ,Virudhunagar ,Tamil Nadu ,District Secretary ,Riaz Ahmed ,Secretary of State ,Karaikal Yousuf Kandana ,Wakpu Board ,Tamil Nadu Daoheet Jamaat ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…