×

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சிறப்பு வினாடி வினா போட்டி

விருதுநகர், நவ.13: விருதுநகர் மாவட்ட கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் வெளியிட்ட தகவல் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் அனைவருக்குமான இணையவழி வினாடிவினா போட்டி நேற்று தொடங்கியுள்ளது.

வரும் 16ம் தேதி மாலை 6 மணி வரை http://www.vrdccbank.com/quiz/ என்ற இணையதள முகவரி மூலம் நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். போட்டியில் கலந்துகொள்ள மேற்கண்ட இணையதள முகவரி மூலம் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று நபர்களுக்கு மாவட்ட அளவிலான விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சிறப்பு வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Tags : Cooperative Week ,Virudhunagar ,Virudhunagar District ,Co ,operative ,Zonal Liaison Director ,P. Senthilkumar ,71st All India Co-operative Week ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...