×

முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தம்

தேவதானப்பட்டி, நவ.13: தேவதானப்பட்டியில் முத்தலாம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி வடக்கு தெருவில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அபுதுல்ஹா, எஸ்ஐ,க்கள் வேல்மணிகண்டன், ஜான்செல்லத்துறை ஆகியோர் தலைமையில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருட்டு சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சாமி செல்லும் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா நேற்று போலீசார் பொருத்தினர். மேலும் திருவிழா தொடர்பாக அதிக போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Muthalamman temple festival ,Devadanapatti North Street ,
× RELATED தேவதானப்பட்டி அருகே லோடு வேன்-பைக்...