×

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 

சிவகங்கை, நவ. 13: கலெக்டர் அலுவலகத்தில் சாக்கோட்டை பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கோட்டையில் பிரசித்தி பெற்ற வீரசேகர் உமையாம்பிகை திருக்கோவில் உள்ளது. திருக்கோவில் அருகே சோழகுளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் புதுவயல் பேரூராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடமும் மனு அளித்து எதிப்பை தெரிவித்தோம். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் மாற்று இடத்தில் திட்டத்தை செயல்படுத்திடுறோம் என்று பொதுமக்களிடம் உத்தரவாதம் அளித்தனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் குடிநீர் மாசுபடும் சுகாதார பிரச்னை ஏற்படும். மக்களின் நலன் கருதி இந்த திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Chakkottai Public Grievance Meeting ,Collector's Office ,Veerasekhar Umaiambikai ,Chakkottai ,Karaikudi ,Cholakulam ,
× RELATED மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்