×

திமுக பாகமுகவர்கள் கூட்டம்

 

ராமநாதபுரம், நவ. 13: கடலாடி திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முனியன் கோயில் விலக்கு தனியார் மண்டபத்தில் பாக முகவர்கள் மற்றும் பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கடலாடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு திமுக அதில் வெற்றி பெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி அடைய களப்பணியாற்ற வேண்டும். மதுரை வைகையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், குறிப்பாக முதுகுளத்தூர் தொகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனீஷ் லாஸ், நளாயினி நாகநாதரை, ஒன்றிய பொருளாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கொடி சந்திரசேகர் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வேந்தோணி துரைராஜ், பிரபாகரன், இளைஞர் அணி நிர்வாகி துரை, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில், ஐடி பிரிவு பரமக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

The post திமுக பாகமுகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Ramanathapuram ,Cuddaly DMK North Union ,Munian ,Temple ,Exclusion ,Velmurugan ,Mudugulathur Legislative Assembly Constituency ,Cuddalore North Union ,Dinakaran ,
× RELATED போதுமான மழை பொழிவால் அமோக  விளைச்சல் அடைந்த சிறுதானியங்கள்