×

பைக் விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலி நண்பருக்கு தீவிர சிகிச்சை பொன்னை அருகே

பொன்னை, நவ.13: பொன்னை அருகே பைக் விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயம் அடைந்த அவரது நண்பர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த ஜங்காலபள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சித்தார்த்(20). இவரது நண்பர் திருவலம் பகுதியை சேர்ந்த சஞ்சய்(20). இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இவர்கள் இருவரும் திருவலத்தில் இருந்து ஜங்காலபள்ளி நோக்கி பைக்கில் சென்றனர். ஜங்காலபள்ளி அடுத்த மல்லிகாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் சித்தார்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது நண்பர் சஞ்சய் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சஞ்சயை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சித்தார்த் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து சித்தார்த்தின் தந்தை சிவலிங்கம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கர்ணா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post பைக் விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலி நண்பருக்கு தீவிர சிகிச்சை பொன்னை அருகே appeared first on Dinakaran.

Tags : Ponnai ,Sivalingam ,Siddharth ,Jangalapalli ,Ponnai, Vellore district.… ,Dinakaran ,
× RELATED பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் கலவகுண்டா அணையில் தண்ணீர் திறப்பு