காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகள் மாலினி (25). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் அவரின் தந்தை மணி புகார் அளித்துள்ளார். எனவே, இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
The post காஞ்சிபுரம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.