தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை நியமித்தது. இதன்மூலம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அர்ச்சனா பட்நாயக் தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் செயலாளராக இருந்தார்.

அர்ச்சனா பட்நாயக், தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்கும் முன், தமிழக அரசின் அனைத்து பணிகளில் இருந்தும் முழுமையாக விடுவித்துக் கொண்டார். இதையடுத்து ஏற்கனவே இருந்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழக அரசின் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் பொறுப்பு வகிப்பார் என்று நேற்று தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் அறிவித்தார்.

இதையடுத்து, சத்யபிரதா சாகு நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அர்ச்சனா பட்நாயக் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக தேர்தல் அலுவலக உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: