×

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கபட வேடதாரி பழனிசாமியையும், அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்த பழனிசாமி வெளியிட்ட அறிக்கை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது. அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவர். அரசு ஊழியர் தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கை மொட்டைக் காகித அறிக்கை என பழனிசாமி கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். மொட்டைக் காகித அறிக்கை என்றால் அது அதிமுக என்பதுதானே உலக வரலாறு என்றும் கூறியுள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி appeared first on Dinakaran.

Tags : MINISTER GOLD TENNARASU ,EDAPPADI PALANISAMI ,Chennai ,Dimuka, Finance and Environmental ,Climate Change ,Minister ,Dangam Tennarasu ,Kapada Vedathari Palanisamiyum ,A. Thu ,. M. K. Government ,Gold Tennarasu ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...