×

திருச்சி அடுத்த மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது: ஆணையர் தகவல்

திருச்சி, நவ.12: கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் விநியோகம் நாளை (நவ.13ம் தேதி) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை,மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் சிவா நகர் , புத்தூர் ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர், அண்ணாநகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகர் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை,ஜெகநாதபுரம், திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் நாளை நவ.13ம் தேதி ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. நவ.14ம் தேதி வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி அடுத்த மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது: ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Manaparai Chipkot ,Kamparasampet ,Tiruchi Corporation ,Durban Reservoir ,Dinakaran ,
× RELATED கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே...