×
Saravana Stores

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலஉதவி: 717 மனுக்கள் குவிந்தன

திருச்சி, நவ.12: மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 717 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் கலெக்டா் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டாமாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத் தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை,விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், தொகுப்புவீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்விஉதவித்தொகை, வங்கிகடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன்,தொழிலாளா் நலவாரியம் தொடா்பான மனுக்கள், வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 717 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 15 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால்களும், 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஸமார்ட் போன்களும், 150 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உரிமைகள் திட்டம் சார்பில் தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளையும், மற்றும் பெல் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கண்தானம் பற்றிய வழிப்புணா்வு தொடா்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பாிசு பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தவசெல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலஉதவி: 717 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Trichy ,Pradeep Kumar ,Collector ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம்: 384 மனுக்கள் மீது விசாரணை