×

கடந்த அரையாண்டில் மொத்த பிரீமிய வருவாய் ரூ.2,33,671 கோடியாக உயர்வு: தனிநபர் பாலிசி விற்பனையும் அதிகரிப்பு

சென்னை: எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
எல்.ஐ.சி நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் சென்ற ஆண்டு ₹17,469 கோடியிலிருந்து ₹18,082 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் தனிநபர் பாலிசிகளின் விற்பனை 13.77% அதிகரித்து 91.70 லட்சம் பாலிசிக்களாக உயர்ந்துள்ளது. தனிநபர் பிரீமியம் வருவாய் 17.29% அதிகரித்து ₹29,538 கோடியாகவும், மொத்த பிரீமிய வருவாய் 13.56% அதிகரித்து ₹2,33,671 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ம் தேதிப்படி முதல் பிரீமியம் வருவாய் அடிப்படையில் எல்.ஐ.சி 61.07% சந்தை பங்களிப்போடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

மேற்கண்ட காலக்கட்டத்தில் நிர்வாகத்தின் கீழ் சொத்து மதிப்பு 16.78 சதவிகிதம் அதிகரித்து ₹55,39,516 கோடியாகவும், தனி நபர் வணிகத்தில் லாபப் பங்களிப்பற்ற ஆண்டு பிரீமியம் 26.31 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. லாபப் பங்களிப்பற்ற தனி நபர் ஆண்டு பிரீமியம் 203.37% அதிகரித்து ₹4,778 கோடியாகியுள்ளது.

The post கடந்த அரையாண்டில் மொத்த பிரீமிய வருவாய் ரூ.2,33,671 கோடியாக உயர்வு: தனிநபர் பாலிசி விற்பனையும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,LIC ,L. I. C ,Dinakaran ,
× RELATED வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி