×

ஒரே மேடையில் விவாதிக்க தயார்; இபிஎஸ்சுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

சென்னை: திமுக – அதிமுக திட்டங்களை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விட்ட சவாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுள்ளார். சமீபத்தில் விருதுநகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அதிமுக தலைமையிலான ஆட்சி குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி ‘நான் முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தேன் என புள்ளிவிவரத்தோடு சொல்கிறேன். முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர், என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என நீங்கள் சொல்லுங்கள், நீங்கள் போடும் மேடைக்கே வருகிறேன். மக்கள் கேட்டு தீர்ப்பு கொடுக்கட்டும், அதற்கு தயாரா என முதல்வருக்கு சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நிருபர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
‘‘திமுக – அதிமுக மக்கள் நலன் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க என்னை அழைத்தால் நான் தயாராக இருக்கிறேன். கலைஞரின் பெயர் திட்டங்களுக்கு வைக்கப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது. பொதுவாக விமர்சனம் என்றால் வரத்தான் செய்யும். வேறு யார் பெயரை வைப்பது. எனவே, யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரை தான் வைக்கிறோம்.’’ என்றார்.

The post ஒரே மேடையில் விவாதிக்க தயார்; இபிஎஸ்சுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,EPS ,Chennai ,Deputy Chief Minister ,Edappadi Palaniswami ,DMK ,AIADMK ,Virudhunagar ,
× RELATED தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்:...