×
Saravana Stores

பங்களாவுக்கு மின் இணைப்பு கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரின் மனைவியும் ஐஎஏஸ் அதிகாரியுமான பீலா, அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவை ராஜேஷ்தாஸ் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக பீலா அளித்த புகாரின் அடிப்படையில், அந்த வீட்டிற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ராஜேஷ் தாஸ் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் மின் இணைப்பு வழங்க மின்சார வாரியத்திற்கு உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராஜேஷ் தாஸ் மற்றும் பீலாவுக்கு இடையேயான உரிமையியல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

The post பங்களாவுக்கு மின் இணைப்பு கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajeshdas ,CHENNAI ,Special ,Rajesh Das ,IAS ,Beela ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு...