சென்னை: அதிமுகவில் மாவட்ட வாரியாக களஆய்வு செல்லும் நிர்வாகிகள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கள ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதிமுக கள ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மாவட்ட வாரியாக பயணம் மேற்கொள்ள இருக்கும் குழு உறுப்பினர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோர் வேலூர் மாநகர், புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிழக்கு-மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம், கிருஷ்ணகிரி கிழக்கு-மேற்கு, தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் சேலம் மாநகர் – புறநகர், நாமக்கல், திருச்சி மாநகர்-புறநகர் வடக்கு-புறநகர் தெற்கு, கரூர், தஞ்சாவூர் கிழக்கு – மேற்கு – மத்தியம் – தெற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு – தெற்கு, திண்டுக்கல் மேற்கு.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செம்மலை ஆகியோர் திண்டுக்கல் கிழக்கு, மதுரை மாநகர்-புறநகர் கிழக்கு-புறநகர் மேற்கு, தேனி கிழக்கு-மேற்கு, விருதுநகர் கிழக்கு-மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி வடக்கு-தெற்கு, தூத்துக்குடி வடக்கு-தெற்கு.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வரகூர் அருணாசலம் ஆகியோர் ஈரோடு மாநகர்-புறநகர் கிழக்கு-புறநகர் மேற்கு, திருப்பூர் மாநகர் – புறநகர் கிழக்கு – புறநகர் மேற்கு, கோவை மாநகர் – புறநகர் வடக்கு – புறநகர் தெற்கு, நீலகிரி, திருநெல்வேலி மாநகர் – புறநகர், கன்னியாகுமரி கிழக்கு – மேற்கு.
முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு – மேற்கு, திருவள்ளூர் வடக்கு – மத்தியம் – தெற்கு – கிழக்கு – மேற்கு, கடலூர் கிழக்கு – வடக்கு – தெற்கு – மேற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி.
சென்னையில் கட்சி அமைப்பு ரீதியாக 8 மாவட்டங்களுக்கும், சென்னை புறநகர் மாவட்டத்திற்குமான கள ஆய்வு அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அதிமுகவில் மாவட்ட வாரியாக கள ஆய்வு நிர்வாகிகள் பட்டியல்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.