×

ஆட்சியை கவிழ்க்க ஆடுகளை போல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார் மோடி: கார்கே கடும் தாக்கு

ராஞ்சி: ஆட்சியை கவிழ்க்க ஆடுகளைப்போல் எம்எல்ஏக்களை பிரதமர் மோடி விலைக்கு வாங்குகிறார் என்று கார்கே தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதில் மோடி நம்பிக்கை கொண்டுள்ளார். அதனால் எம்எல்ஏக்களை அவர் விலைக்கு வாங்குகிறார். ஆடுகளைப் போல் எம்எல்ஏக்களை மோடி விலைக்கு வாங்கி, அவர்களுக்கு உணவளிக்கிறார். பின்னர் விருந்து வைத்து ஆட்சிகளை கவிழ்க்கிறார். மோடியும், அமித்ஷாவும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக ஈடி, சிபிஐ,ஐடி உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டனர். ஆனால் நாங்கள் பயப்படவில்லை.

ஏனெனில் நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியிருக்கிறோம். அதற்காக உயிரை தியாகம் செய்தும் இருக்கிறோம். எனவே மோடி எங்களை சிறைக்குள் தள்ளினாலும், நாங்கள் தொடர்ந்து ஏழைகளுக்கு சேவை செய்வோம். மோடி, அமித்ஷா, அதானி, அம்பானி ஆகியோர் இன்று நாட்டை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் ராகுல் காந்தியும், நானும் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற முயற்சிக்கிறோம்.

மோடி தனது வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றாத ஒரு வழக்கமான பொய்யர். அவர் முதல்வராக இருந்த குஜராத்தில் ஏதேனும் பொற்காலம் வந்ததா?. 25 ஆண்டுகளாக மோடியை முதல்வராகவும், பிரதமராகவும் சகித்து வருகிறோம். பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் சுரண்டுபவர்களை அவர் ஆதரிக்கிறார். அவர் பொய்யர்களின் தலைவர். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆட்சியை கவிழ்க்க ஆடுகளை போல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார் மோடி: கார்கே கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Carke ,Ranchi ,Karke ,Congress ,President ,Jharkhand Assembly elections ,Dinakaran ,
× RELATED மீண்டும் வாக்குச்சீட்டு முறையே தேவை: கார்கே