×

கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், நவ.12: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. குடியாத்தம் வனப்பகுதி அருகில் உள்ள தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிப்பள்ளி, பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா, வி.டி.பாளையம், பூசாரிவலசை, கதிர்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து, அங்குள்ள பயிர்களை சேதம் செய்து வருகிறது. யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை கிராமத்தில் காட்டு யானை ஒன்று பயங்கர பிளறும் சத்தத்துடன் கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர், அங்குள்ள விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சித்தது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து மேளம் அடித்து அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள்ள விரட்டியடித்தனர். அந்த யானை மீண்டும் விவசாய நிலத்துக்குள் நுழையும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே, யானையை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்டியடிக்கவும், கிராமத்திற்குள் மீண்டும் நுழையாதவாறு தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Kudiyattam ,Gudiatham ,Dhanakondapalli ,Chinakunda ,Veerishettipalli ,Baradarami ,Kotamita ,Morthana ,V.D.Palayam ,Pusarivalasa ,Kathirkulam ,Kudiattam forest ,Kudiatham ,Dinakaran ,
× RELATED கிராமத்திற்குள் புகுந்த யானை விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே