×

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் வேலூர் வள்ளலாரில் பரபரப்பு

வேலூர், நவ.12: வேலூர் வள்ளலாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் வள்ளலார் 13வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அருண்குமார் நேற்று காலை காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் பகல் 12 மணி அளவில் காரை வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததுள்ளது. பின்னர் தீ மளமள எஞ்சின் முழுவதும் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ மேலும் பரவியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் வேலூர் வள்ளலாரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore Vallalar ,Vellore ,Vallalar, Vellore ,Arun Kumar ,13th Cross Street, Vallalar, Vellore ,Arunkumar ,Dinakaran ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...