×

கோயம்பேடு மார்க்கெட் நடைபாதை கடைகளுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளுக்கு ரூ.84,700 அபராதம் விதித்து அங்காடி நிர்வாக முதன்மை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மார்க்கெட் வளாகத்திற்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அத்துடன் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்த கடைகளுக்கு ரூ.84,700 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது தெரியவந்ததால் கடும் நடவடிக்கை எடுப்படும் என்று அங்காடி நிர்வாகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

The post கோயம்பேடு மார்க்கெட் நடைபாதை கடைகளுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Koyambedu market ,
× RELATED கன மழையால் கோயம்பேடு மார்க்கெட்...