×

பிரபல மால் பார்க்கிங்கில் அதிக கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: வேளச்சேரியில் உள்ள பிரபல மாலில், பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூலிப்பதால், அங்கு வரும் பெரும்பாலானோர் தங்களது இருசக்கர வாகனங்களில் நிறுத்துவதால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. வேளச்சேரியில் பிரபல மால் செயல்பட்டு வருகிறது. இங்கு, உணவகங்கள், துணிக்கடைகள், தியேட்டர்கள், அழகு சாதன பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் இந்த மாலில் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்த மாலில் பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால், இங்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருகே உள்ள பார்க்கிங் பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால், இங்கு வரும் பெரும்பாலானோர் தங்களது இருசக்கர வாகனங்களை நடைபாதையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். வேளச்சேரியின் இந்த முக்கிய சாலையில் சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இவ்வாறு நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி நடைபாதை கடைகளும் இங்கு அமைந்துள்ளதால், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

The post பிரபல மால் பார்க்கிங்கில் அதிக கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Velachery ,Dinakaran ,
× RELATED வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க...