×

சென்னையில் நடைபெற்ற கிராண்ட்மாஸ்டர்ஸ் சேலஞ்சர்ஸ் போட்டியில் பிரணவ் சாம்பியன்!

சென்னை: கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2 பிரிவுகளாக(மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ்) நடத்தப்பட்டது. செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒருவாரமாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வந்தது. இதில் சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

7 சுற்றுகள் கொண்ட தொடரில் 4ல் வெற்றி, 3ல் டிரா என 5.5 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். சாம்பியனான பிரணவ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாஸ்டர்ஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளார். மாஸ்டர்ஸ் தொடர் 2700 ஃபிடே புள்ளிகளை பெற்ற வீரர்கள் விளையாடுவர். சேலஞ்சர்ஸ் தொடர் 2500 ஃபிடே புள்ளிகளை பெற்ற வீரர்கள் விளையாடுவர்.

சேலஞ்சர்ஸ் தொடரில் இந்தியாவை சேர்ந்த 8 கிராண்ட்மாஸ்டர்ஸ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, பிரணவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பலப்பரீட்சை நடத்தினர். அதில் 4ல் வெற்றி, 3ல் டிரா என 5.5 புள்ளிகளை பெற்று பிரணவ் பட்டம் வென்றார்.

The post சென்னையில் நடைபெற்ற கிராண்ட்மாஸ்டர்ஸ் சேலஞ்சர்ஸ் போட்டியில் பிரணவ் சாம்பியன்! appeared first on Dinakaran.

Tags : Pranav ,Grandmasters Challengers ,Chennai ,Grandmasters Chess Championship Series ,championship ,Anna Century Library ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...