×

கரூர் குளத்துபாளையம் புகைவழிப் பாலத்தில்$31 லட்சத்தில் 50 மின் விளக்குகள்

கரூர், நவ. 11: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்துபாளையம் புகைவழிப் பாலம் முதல்- புகலூர் சாலை வரை ரூ.31 லட்சம் மதிப்பில் 50 மின்விளக்குகள் பொதுமக்கள் பாட்டிற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்து பாளையம் குகை வழி பாலம் முதல் புகளூர் சாலையில் பொதுமக்கள் கோரிக்கையையடுத்து, மாநகராட்சி பொது நிதியில் ரூ. 31 லட்சத்தில் 50 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், தமிழக மின்சார மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தங்கவேல், பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கே எம் சுதா மண்டலத் தலைவர்கள் கா அன்பரசன், திட்டக்குழு உறுப்பினர் சாலை ரமேஷ், மாநகர பகுதி கழக பொறுப்பாளர் ஜோதி பாசு, மாநகராட்சி கவுன்சிலர்கள் நிர்மலா தேவி, தேவி ரமேஷ், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பொறியாளர்கள் ரவி, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கரூர் குளத்துபாளையம் புகைவழிப் பாலத்தில்$31 லட்சத்தில் 50 மின் விளக்குகள் appeared first on Dinakaran.

Tags : Karur Kulatupalayam ,Karur ,Tamil Nadu ,Electricity Minister ,V.Senthil Balaji ,Kulathupalayam ,Bugalur road ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் முதியோர்,...