×

நகை, செல்போன் பறிப்பு: தோழியின் காதலன் கைது

வேளச்சேரி, நவ.11: சிங்கபெருமாள் கோயில், வாரிநகரை சேர்ந்தர்கள் பானுமதி(31), குழந்தை தெரசா(27). இருவரும், தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருகின்றனர். இவர்களின் தோழி ஸ்டெல்லா. இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த ஜெகதீஸ்(47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெகதீஸ், ஸ்டெல்லா, பானுமதி, குழந்தை தெரசா ஆகியோர் தீபாவளிக்காக வேளச்சேரியில் உள்ள ஒரு மாலுக்கு சென்றனர்.

அப்போது குழந்தை தெரசாவின் அருகில் வந்த காதலன், காதலி இருவரும் நைசாக பேசி அவரது மொபைல் போனை வாங்கி கொண்டு வெளியில் நிற்பதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், பானுமதியை அருகில் உள்ள அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பானுமதி அணிந்திருந்த 4 சவரன் நகையை வாங்கி வைத்து கொண்டு இருவரும் மாயமாகினர். இதனால், பானுமதி, குழந்தை தெரசா இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வேளச்சேரி போலீசார் காதலர்கள் இருவரையும் தேடிவந்தனர். இந்தநிலையில் ஜெகதீசன் ஈரோட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று ஈரோடு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

The post நகை, செல்போன் பறிப்பு: தோழியின் காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Singaperumal ,Temple ,Varinagar ,Banumathi ,Child Teresa ,Stella ,Jegadis ,Erota ,Jagathis ,
× RELATED வேளச்சேரி மக்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை