×

சர்வீஸ் ரோட்டின் வழியாக பேருந்துகள் வராததால் பயனற்று கிடக்கும் நிழற்குடை

 

மதுக்கரை: கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கும்போது கோவையை அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் செல்வதற்காக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அப்படி சர்வீஸ் ரோடு அமைக்கும்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வசதிக்காக அந்த சர்வீஸ் ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளுர் மற்றும் வெளியூர் பேருந்துகள், சர்வீஸ் ரோட்டின் வழியாக வராமல் பிரதான சாலையில் மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் பயணிகள் நிழற்குடை பயனற்று கிடக்கிறது. ஆகவே,தேசிய நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள், சர்வீஸ் ரோட்டின் வழியாக பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சர்வீஸ் ரோட்டின் வழியாக பேருந்துகள் வராததால் பயனற்று கிடக்கும் நிழற்குடை appeared first on Dinakaran.

Tags : Nizhakudai ,Madhukarai ,Coimbatore-Pollachi ,Malumichambatti ,Coimbatore ,
× RELATED பள்ளியில் புகுந்த குரங்கு விரட்டியடிப்பு