×
Saravana Stores

பாரிமுனை பகுதியில் உரிய ஆவணமில்லாத ரூ.25 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு

தண்டையார்பேட்டை:பாரிமுனை 2வது கடற்கரை சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்தவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பிராட்வேயைச் சேர்ந்த முகமது ஷாருக் ராஜா (27) என்பது தெரிய வந்தது.

பின்னர் விசாரனை நடத்தி பணத்தையும், ஷாருக் ராஜாவையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதேபோல் பாரிமுனை 2வது கடற்கரை சாலையில் சிதம்பரத்தைச் சேர்ந்த ஐசக் தீன் (19) என்ற இளைஞர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரையும், அவரிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

The post பாரிமுனை பகுதியில் உரிய ஆவணமில்லாத ரூ.25 லட்சம் பறிமுதல்: வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Barimunai ,Dandiyarpettai ,North Coast Police ,Mundinam ,2nd Beach Road ,Parimuna ,Tax Department ,Dinakaran ,
× RELATED உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க...