×
Saravana Stores

தாமிரபரணியில் கழிவுநீர்: நீதிபதிகள் நேரில் ஆய்வு

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், 2018ம் ஆண்டு மதுரை ஐகோர்ட் கிளையில், ‘‘தாமிரபரணியில் சாக்கடை கலக்கக் கூடாது, கரையோரம் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைக்க வேண்டும்’’ என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி நதியில் கலக்கும் சாக்கடைகள் குறித்து நவ. 10ம் தேதி நேரடி ஆய்வு செய்யப்போவதாக தெரிவித்தனர்.

அதன்படி நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேற்று காலை நெல்லையில் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்கள், ஆறு மாசு படும் இடங்கள் ஆகியவை குறித்து முன்கூட்டியே தகவல்களை சேகரித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் தியேட்டர் இறக்கத்தில் கழிவு நீர் சாக்கடை ஆற்றில் கலக்கும் இடத்தை பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் ஆற்றில் கலப்பதை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டினர்.

The post தாமிரபரணியில் கழிவுநீர்: நீதிபதிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,Nellai ,Muthalangurichi Kamaraj ,Karinganallur, Thoothukudi ,Madurai High Court ,Thamirapharani ,Dinakaran ,
× RELATED தாமிரபரணியில் கழிவுநீர்: நீதிபதிகள் நேரில் ஆய்வு