×

தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு; 200 சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்: பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேச்சு

பெரம்பலூர், நவ. 10: 200 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பெரம்பலூர் நகர (BLA-2), வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் பேசினார். பெரம்பலூர் நகர திமுக சார்பில் -BLA – 2, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக்கூட்டம் பாலக்கரை அருகேயுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் நகர அவைத் தலைவர் ரெங்கராஜ் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் பெருமாள், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பெரம்பலூர் நகரச் செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான பிரபாகரன் தலைமை வகித்துப்பேசியதாவது:
தலைமைக் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிக்கும் ஒரு தேர்தல் பொறுப்பாளரை நியமித்து, அவர்களுக்கு அறிவாலயத்தில் திமுக தலைவரே அறிவுரைகளை வழங்கி வழிகாட்டு முறைகளைச் சொல்லி, தேர்தல் பணியாற்ற பணித்திருக்கிறார்கள். 11-ம் தேதிக்குள் (பிஎல்ஏ- 2) வாக்குச்சாவடி முகவர்கள் நிலை 2 சிறப்பாக செயல் படுகிறார்களா இல்லையா, அதிலே மாற்ற வேண்டியவர்கள் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து அறிவிக்க வேண்டிய இடத்தில், தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக் கிறார்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பினை நாம் வழங்கிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு முடிக்க தலைமை கழகம் அறிவுரை வழங்கி இருக்கிறது. அந்தப் பணியையும் தேர்தல் பார்வையாளர்கள் மேற் கொள்ள உள்ளனர். எனவே தலைமைக் கழகம் என்ன சொல்லி இருக்கிறதோ அந்த பணிகளை அவர்கள் மேற்கொள்ள நாம் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். 200 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல்வர் நமக்கு பிறப்பித் துள்ள கட்டளையாகும். அந்தக் கட்டளையை முதல் வரின் வழிகாட்டுதலோடு செய்து முடிக்க வேண்டியது நம்முடைய கடமை எனத் தெரிவித்தார்.இந்தக்கூட்டத்தில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆதவன், அப்துல் பாரூக், நகர துணைச் செயலாளர் சபியுல்லா, பெரம்பலூர் நகர வார்டு செயலாளர்கள், BLA -2, மற்றும் பல்வேறு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு; 200 சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்: பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Perambalur ,MLA Prabhakaran ,Perambalur Assembly Constituency ,MLA ,Prabhakaran ,Perambalur City ,BLA-2 ,Polling Station Level Agents ,City ,DMK… ,Dinakaran ,
× RELATED துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு...