×

கரூர்- சேலம் மெயின் ரோட்டில் மண்மங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

கரூர், நவ.10: மண்மங்கலத்தில் ரூ. 14.50கோடியில் பாலம் கட்டும்பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்திய அளவில் தேசிய நெடுஞ்சாலை 60 கிலோ மீட்டர் செல்லும் ஒரே மாவட்டம் கரூர். இந்திய அளவில் கரூர் மாவட்டத்திற்கு ஒரு சிறப்பாகும். கரூர் மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி கோட்டையில் தொடங்கி கரூர் மாவட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் முடிகிறது. கரூர் மாவட்டத்தில் சீதப்பட்டி காலனி, ஆறுரோடு, சுக்காலியூர் ஆண்டாங்கோயில், பெரியார் வனைவு, கரூர்-கோவை ரோடு ரவுண்டானா குளத்துப்பாளையம் ரயில்வே பாலம் அருகில், காதப்பாறை கொங்கு பள்ளி அருகே, எம்.குமாசாமி பொறியியல் கல்லூரி பகுதி, புகளூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் மண்மங்கலம் அருகே கரூர் செம்மடையில் மாவட்ட தமிழக மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்பி ஆகியோர் தீவிர முயற்சியால் ஒரு பாலம் அமைக்கப்பட்டு கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 மாதங்களாக கரூர் செம்படை பகுதியில் விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதால் நீண்ட நாட்களாக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்பி ஆகியோரிடம் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

இதன் அடிப்படையில் ரூபாய் 14.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மண்மங்கலம் உயர்மட்ட பாலம் கீழே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாகவும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பாலம் கட்டும் போதியில் கான்கிரீட் வேலை முழுமையாக நிறை பெற்றுள்ளது.

அதன் பின் சிமெண்ட் சிமெண்ட் கலவை போட்டு ஒன்றரை கிலோ மீட்டர் பகுதிக்கு அணுகு சாலை பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தடுக்கப்படும், குறிப்பாக மண்மங்கலம் தவிட்டுப்பாளையம் கடம்பங்குறிச்சி ராமேஸ்வர பட்டி கவுண்டம்புதூர் ஒரத்தை ஆகிய பகுதி மக்களுக்கு இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய நிலையில் பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர்- சேலம் மெயின் ரோட்டில் மண்மங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Manmangalam ,Karur-Salem ,Karur ,India ,National Highway ,Karur district ,Antipatti Fort ,Dinakaran ,
× RELATED கரூர்- சேலம் மெயின் ரோட்டில்...