சென்னை: பாமக நிறுவனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பாமக கடலூரில் அம்பேத்கரின் சிலைகளை உடைக்கப்போவதாகவும், அவமதிக்கப்போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது கண்டனத்திற்குரியது. விசிக கட்சியினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மஞ்சக்கொல்லை கிராம மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற பாமக நிர்வாகி மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இப்போது அடுத்தகட்டமாக அம்பேத்கர் சிலைகளை பாமகவினர் சேதப்படுத்தப்போவதாக அவதூறு பரப்பி வருகிறது. எனவே, கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
The post அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.