- மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபை
- தேடுவது
- அமைச்சர்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- எம் சுப்பிரமணியம்
- மு.கே ஸ்டாலின்
- க்கான ஐக்கிய நாடுகள் சபை
- மருந்து
- 79வது ஐ.நா
- நியூயார்க்
- பொதுச் சபை
- ஐக்கிய நாடுகள் சபைக்கு
- மு.கே ஸ்டாலின்
சென்னை: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் வழங்கிய விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் காண்பித்து வாழ்த்து பெற்றார். செப்டம்பர் 25ம் தேதி, நியூயார்க்கில் நடந்த 79வது ஐ.நா. பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தல் உட்பட தொற்றாநோய்கள் மற்றும் மனநலம் தொடர்பான சிறந்த பணிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த 20.09.2024 அன்று”உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடு-2024”, பாரத் மண்டபம், டெல்லியில் நடைபெற்ற விழாவில், 2023-24ம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான “ஐக்கிய நாடுகளின் ஊடாடும் பணிக்குழு விருது” மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது ஆகிய 2 விருதுகளையும் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
The post மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து appeared first on Dinakaran.