×

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக சிறப்பு மனு முகாமில் 44 மனுக்கள் வந்தன

பெரம்பலூர்,நவ.8: பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் தலைமையில், மாவட்ட எஸ்பி அலுவலகத் தில் நடந்த சிறப்பு மனு முகாமில் 44-மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி(தலைமையிடம்) மதியழகன் தலைமையில் சிறப்பு மனுமுகாம் நடை பெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட ஏடிஎஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார்கள். இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப். இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 44 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவ டிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.முகாமில் பேசிய மாவட்ட ஏடிஎஸ்பி மதியழகன், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும்,பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை முறையாக பயன்படுத்திக் கொள்ளு மாறும், மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் மாவட்ட எஸ்பி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.

The post பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக சிறப்பு மனு முகாமில் 44 மனுக்கள் வந்தன appeared first on Dinakaran.

Tags : Special Petition Camp ,Perambalur District SP Office ,Perambalur ,SP ,Perambalur district ADSP ,Mathiyalagan ,Perambalur District SP ,Adarsh Basera ,Perambalur District… ,Perambalur District SP Office Special Petition Camp ,Dinakaran ,
× RELATED பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய...