க.பரமத்தி, நவ. 8: கரூர்-தாராபுரம் நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் கடைவீதியில் 3 சாலையில் ஒரே இடத்தில் சந்திக்கும் இடத்தில் தானியங்கி சிக்னல் லைட் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தாராபுரம் நெடுஞ்சாலையில் சின்னதாராபுரம் கடைவீதி முக்கிய கடைவீயாக உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேசன், வாரச்சந்தை, போஸ்ட் ஆபீஸ், வி,ஏ.ஓ அலுவலகங்கள், ஆர்.ஐ.அலுவலகம், மளிகைக்கடைகள், டீ மற்றும் ஓட்டல்கள் போன்ற வணிக நிர்வனங்கள் உள்ளன. மேற்கண்ட அலுவலகம் மற்றும் கடைகளில் தங்கள் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள சின்னதாராபுரம் சுற்றுப்புரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக சின்னாதாரபுரம் வழி சந்திப்பில் கூடுகின்றனர்.
அதற்கு தென்னிலை பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், கரூர் வழியிலிருந்து சின்னதாராபுரம் வரும் வாகன ஓட்டிகளும் இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான ஜல்லி மற்றும் மண் லாரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புகின்றன. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளாவிலேயே உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் விபத்துக்களும் அரங்கேறி வருகின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சின்னதாராபுரம் போலீசார் கடைவீதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். இதனால் எதிர்புறமாக வரக்கூடிய வாகனங்கள் ஒழுங்குபடுத்த முடியும். எனவே இந்த சந்திப்பில் தானியங்கி சிக்னல் லைட் அமைத்திட சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சணப்பிரட்டி பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.