×

10 ஆண்டுக்கு பின் திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள்

 

போச்சம்பள்ளி, நவ.8: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அங்கம்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10 வருடங்களுக்கு பிறகு 250 குடும்பங்களை சேர்ந்த 250 பேர், திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் கையாளும் முறை வினோதமாக உள்ளது. நினைத்த நேரத்திற்கோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ திருப்பதிக்கு செல்வது இல்லை. தனி நபராக செல்வதும் இல்லை. இது கிராம கட்டுப்பாடாக இன்று வரை தொடர்கிறது. கிராமத்தில் உள்ளவர்கள் அருள் வந்து குறி சொன்னால் மட்டுமே, திருப்பதிக்கு செல்வார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு பிறகு, பூசாரி அருள் வந்து கூறியதை தொடர்ந்து, கிராம மக்கள் 250 பேர் பஸ்களில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் இரவு, கிராமங்களை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். இவர்கள் செலவிற்காக ஒவ்வொரு வீட்டிலும், மஞ்சள் துணி கட்டிய பித்தளை சொம்பாலான உண்டியலில் காணிக்கையாக சேர்த்து வைத்த பணத்தை எடுத்து சென்றனர். ஒட்டு மொத்தமாக கிராம மக்கள் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றதால் கிராமமே வெறிச்சோடி ஆளரவமின்றி காணப்படுகிறது.

The post 10 ஆண்டுக்கு பின் திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Bochambally ,Angambatti ,Bochambally, Krishnagiri district ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே...