*அமைச்சர் பேச்சு
திருப்பதி : சந்திரகிரி அடுத்த தொண்டவாடாவில் அமைக்கப்பட்டுள்ள லேஅவுட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேசினார்.
திருப்பதி மாவட்டம், சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட தொண்டவாடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லேஅவுட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில வீட்டு வசதி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி, இணை கலெக்டர் சுபம் பன்சால், சந்திரகிரி எம்.எல்.ஏ புலிவார்த்தி நானி, பூதல பட்டு எம்.எல்.ஏ முரளி மோகன் மற்றும் வீட்டுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் பேசுகையில், ‘தொண்டவாடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் லேஅவுட் பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை கட்டுமானம் போன்ற உள்கட்டமைப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
அனைத்து லேஅவுட்களிலும் மின்சாரம், சாலைகள் மற்றும் வடிகால் போன்ற வசதிகள் மேற்கொள்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு வீட்டுவசதி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்குள் அனைத்து பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என பேசினார் அதைத்தொடர்ந்து, சந்திரகிரி எம்.எல்.ஏ. நானி பேசுகையில், ‘மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்றி வருகின்றனர்.
சந்திரகிரியின் வளர்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாநில அரசு செயல்பட்டு வருவது. மாநில அரசு தற்போது தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியத்தை அளித்து வருகிறது. அரசு வழங்கிய ஆறு உத்திரவாதங்களை செயல்படுத்த மாநில அரசு செயல்பட்டு வருகிறது’ என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில வீட்டுவசதி கழகத்தின் தலைமை பொறியாளர் பிரசாத், திருப்பதி ஆர்.டி.ஓ ராம் மோகன், வீட்டுவசதி அதிகாரிகள் நிவாசராவ் பத்மநாபம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
The post சந்திரகிரி அடுத்த தொண்டவாடாவில் அமைக்கப்பட்டுள்ள லேஅவுட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.