- சந்திரபாபு நாயுடு
- பவன் கல்யாண்
- முதல் அமைச்சர்
- யோகி ஆதித்யநாத்
- அமைச்சர்
- ரோஜா
- திருமலா
- முன்னாள் அமைச்சர்
- ஆந்திரா
- ஆந்திர மாநிலம்
- திருப்பதி மாவட்டம்
- யர்ரவாரி பாளையம்
- ரோஜா பாட்டி
- தின மலர்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் தவறுகளை தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்என முன்னாள் அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், யர்ரவாரி பாளையம் அருகே 10ம் வகுப்பு மாணவியை காதல் டார்சர் செய்த இளைஞர்கள் மயக்க மருந்து கொடுத்து பிளேடால் உடலை கிழித்ததில் காயமடைந்தார். திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பாதிக்கப்பட்ட சிறுமியை முன்னாள் அமைச்சர் ரோஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன. கூட்டணி ஆட்சி பதவியேற்ற 120 நாட்களில் பெண்கள், மைனர் சிறுமிகளை எரித்து கொலை செய்வது, தாக்குதல், பாலியல் பலாத்காரம் என 110 சம்பவங்கள் நடந்துள்ளன. உள்துறை அமைச்சர் சரியாக வேலை செய்யவில்லை என்று துணை முதல்வர் பவன் கல்யாண் கூறுகிறார்.
டம்மியாக உள்துறை அமைச்சராக வைத்து மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளை அவர் மீது சுமத்தி வருகின்றனர். மாநிலத்தில் டிஜிபி முதல் எஸ்.ஐ. வரை சந்திரபாபு நாயுடு அவரது மகன் லோகேஷ் பட்டியல் தயாரித்து நியமித்து வருகின்றனர். லோகேஷ்க்கு பிடிக்காதவர்கள் மீது ரெட் புக் என வைத்து பழிவாங்கி வருகின்றனர். பவன் கல்யாண் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு வேண்டுமென்றால் சந்திரபாபுவிடம் யோகி ஆதித்யநாத் போல் வேலை செய்ய பவன்கல்யாண் சொல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவரை பதவி விலக சொல்லிவிட்டு பவன் கல்யாண் முதல்வராகிதான் யோகி ஆதித்யநாத் போல் செயல்பட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
The post சந்திரபாபு நாயுடுவை பதவி விலக சொல்லுங்க யோகி ஆதித்யநாத் போல் ஆட்சி செய்ய பவன் கல்யாண் முதல்வராக வேண்டும்: முன்னாள் அமைச்சர் ரோஜா பேட்டி appeared first on Dinakaran.